சோழ மன்னர்கள் பற்றிய பாடல்கள்
புறநானூறு 10, சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி,
பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்
வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!
புறநானூறு 66, சோழன் கரிகாற் பெருவளத்தான்,
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்.
சேரமான் பெருஞ்சேரலாதன்
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!
புறநானூறு 67 – கோப்பெருஞ் சோழன்,
பாடியவர்: பிசிராந்தையார்
அன்னச் சேவல் ! அன்னச் சேவல் !
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனையக்,
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழ நன்னாட்டுப் படினே, கோழி
உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,
வாயில் விடாது கோயில் புக்கு, எம்
பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத், தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.
சோழ மன்னர்கள் பாடிய பாடல்கள்
1. புறநானூறு
சோழன் நலங்கிள்ளி - 73, 75
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் - 173
சோழன் கோப்பெருஞ் சோழன் - 214,215,216
சோழன் நல்லுருத்திரன் - 190
குறு நில மன்னர் தொண்டைமான் இளந்திரையன் – 185
2. குறுந்தொகை
சோழன் கோப்பெருஞ் சோழன் – 20, 53, 129, 147
குறுந்தொகை 20. பாலை திணை – கோப்பெருஞ்சோழன், தலைவி தோழியிடம் சொன்னது
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
குறுந்தொகை 53. மருதம் திணை – கோப்பெருஞ் சோழன், தோழி தலைவனிடம் சொன்னது
எம் அணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேர் இறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோடு உற்ற சூளே.
குறுந்தொகை 129. குறிஞ்சி திணை – -கோப்பெருஞ்சோழன், தலைவன் தன் நண்பனிடம் சொன்னது
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளா யத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே.
குறுந்தொகை 147. பாலை திணை, -கோப்பெருஞ் சோழன் – தலைவன் சொன்னது
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன்றுயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே.
புறநானூறு 75, பாடியவன்: சோழன் நலங்கிள்ளி
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்,
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே-மையற்று,
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே.
புறநானூறு 173.
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே.
புறநானூறு 185
பாடியவர்: குறு நில மன்னர் தொண்டைமான் இளந்திரையன்
கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக்கூழ் அள்ளற் பட்டு,
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.
புறநானூறு 190.
பாடியவர்: சோழன் நல்லுருத்திரன்.
விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையடு
இயைந்த வைகல் உளவா கியரோ!
புறநானூறு 214. நல்வினையே செய்வோம்.
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்.
`செய்குவம் கொல்லோ நல்வினை!’எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
தொய்யா உலகத்து உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே.
புறநானூறு 215 -
பாடியவர்: பிசிராந்தையர்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன் மன்னே.
புறநானூறு 216
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்.
“கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய,
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்மின், ஆரறி வாளிர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
புன்பெயர் கிளக்கும் காலை, ‘என் பெயர்
பேதைச் சோழன்’ என்னும், சிறந்த
காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை,
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!
புறநானூற்றில் சோழ மன்னர்கள்
சோழ மன்னர்கள் – பாடிய புலவரின் பெயர் – பாடல் எண்
1. சோழன் உருவப் ப·றேர் இளஞ்சேட் சென்னி – பரணர் 4, பெருங்குன்றூர் கிழார் 266
1. சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி பசுங்குடையார் 203
1. சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி பசுங்குடையார் 370, 378
1. சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி – ஊன் பொதி பசுங் குடையார் 10
2. சோழன் கரிகாற் பெருவளத்தான் – கருங்குழல் ஆதனார் 7, 224 வெண்ணிக் குயத்தியார் 66
3. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13
4. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி – பாண்டரங் கண்ணனார் 16, உலோச்சனார் 377
5. சோழன் நலங்கிள்ளி – உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 27, 28, 29, 30 கோவூர்கிழார் 31, 32, 33, 68, 382, 400
சோழன் நலங்கிள்ளி (the king is the poet in 73, 75) ஆலத்தூர் கிழார் 225
5. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி – கோனாட்டு எறிச்சிலுர் மாடலன்
மதுரைக் குமரனார் 61
6. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் – ஆலத்தூர் கிழார் 34, 36, 68, 69, 225 – வெள்ளைக்குடி
நாகனார் 35 – மாறோக்கத்து நப்பசலையார் 37, 39, 226 – ஆவூர் மூலங் கிழார் 38, 40
6. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் (king sang 173 for சிறுகுடி கிழான் பண்ணன்),
கோவூர்கிழார் 41, 46, 70, 373, 386- நல்லிறையனார் 393 – எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் 397
இடைக்காடனார் 42 - ஆடுதுறை மாசாத்தனார் 227 – ஐயூர் முடவனார் 228
7. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் – தாமப்பல் கண்ணனார் 43
8. சோழன் நெடுங்கிள்ளி - கோவூர் கிழார் 44
8. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி – கோவூர் கிழார் 47
9. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன் – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58-
உறையூர் மருத்துவன் தாமோதரனார் 60 – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 197
10. சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி – பரணர் 62, 63
11. சோழன் கோப்பெருஞ் சோழன் – பிசிராந்தையார் 67, 212 புல்லாற்றூர் எயிற்றியனார் 213 – கோப்பெருஞ்
சோழன் (king sang 214,215,216) – பொத்தியார் – 217 கண்ணகனார் நத்தத்தனார் 218
பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார் 219 – பொத்தியார் 220, 221, 222, 223
12. சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி – சாத்தந்தையார் 80, 81, 82 பெருங்கோழி நாய்கண் மகள்
நக்கண்ணையார் 83, 84, 85
13. சோழன் நல்லுருத்திரன் (king sang 190)